தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இந்த மாதம் 17-ம் தேதி மற்றும் 19-ம் தேதி நடைபெற இருந்தது. வரும் 21-ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடப்பதாக இருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுதான் முடிவடைந்தது. இந்நிலையில் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினர் மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும், எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பாதால் தேர்தல் தொடர்பான ஆணைகளை ரத்து செய்யப்படுகிறது. முறையாக இடஒதுக்கீட்டு பின்பற்ற பற்று உள்ளாட்சி தேர்தல் தேதிகள் பற்றி மறு அறிவிப்பாணை அரசு வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் மறு தேதி அறிவித்து வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.