மதுரை: ஆன்லைன் ரம்மி (Online Rummy) விளையாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, அதை தடை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் (Madurai High Court) வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 


ALSO READ | ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறிய காய்கறி விற்பனையாளர்; சுவாரஸ்யமான சம்பவம்


அந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "பணத்தை மையமாக வைத்து பல ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளன. அதில் ஒன்று தான் ரம்மி விளையாட்டும். இதுபோன்ற விளையாட்டுகள் மூலம் வேலையில்லா இளைஞர்களை குறி வைக்கப்படுகின்றன. எனவே மத்திய, மாநில அரசுகள் தேவையான சட்டங்களை இயற்றி, லாட்டரி சீட்டு முறைக்கு தடை விதித்ததை போல் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதி புகழேந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மேலும் தெலுங்கானாவில் ஆன்லைன் சீட்டு (Play Online Rummy) விளையாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது என்று உதாரணத்தையும் நீதிபதி மேற்கோள்காட்டினர்.