திருச்சி, திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ள மொட்டை கோபுரத்தை ஆகம விதிகளின்படி கட்ட  நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகம விதிப்படி கிழக்கு பக்கம் தான் ராஜ கோபுரம் இடம் பெற வேண்டும் எனவும், இந்த கோவிலில் வடக்கு பக்கம் பார்த்து கோபுரம் கட்டப்பட உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சென்னை தினமலர் அலுவலகத்தில் மலம் வீசிய தபெதிக!


இதற்கு அறநிலைத்துறை திறப்பில் ஆஜரான வழக்கறிஞர், 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில் மீது படையெடுப்புகள் காரணமாக கட்டுமானங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பஞ்சரத்ன ஆகமப்படி எந்த திசையிலும் ராஜகோபுரம் கட்டிக் கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதற்கு மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்த போது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது என்று நீதிபதிகள் கண்டித்தனர்.



தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் வடக்கு கோபுர வாசல் மூடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னோருக்கு தெரியாத ஆகமமா இப்போது உள்ளவர்களுக்கு தெரிகிறது என கேள்வி எழுப்பினர். மேலும், அனைத்து கோவில்களிலும் மூடப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 1726 ஆம் ஆண்டு பிறந்த அகோர சிவாச்சாரியார் எழுதிய ஆகமத்தின்படி சில கோவில்களில் வடக்கு கோபுர வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.


மேலும் படிக்க | 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும்..’ விளாசிய உதயநிதி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ