சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 


 



;


 


கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணி அளவில் காலமானார். இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.


நீதிபதி வைத்தியநாதன் கூறியதாவது:-


முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார், உணவு சாப்பிடுகிறார், என செய்திகள் வெளியாகின. ஆனால், ஜெயலலிதா அவர்கள் திடீரென மரணம் அடைந்தது எப்படி? ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் கூறினார். 


இதையடுத்து பிரதமரின் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஐகோர்ட்.