அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான வழக்கு: சபாநாயகர் ஒப்புதல் சரியே - உயர்நீதிமன்றம்
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணைக்கு எடுத்த போது அமைச்சராக இல்லாததால், ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர சபாநாயகர் ஒப்புதல் அளித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசன் என்பவருக்கு முறையீடாக ஒதுக்கீடு செய்ததாக, அமைச்சர் பெரியசாமி உள்ளிட்டோருகு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து அமைச்சரை விடுவித்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் பெரியசாமியின் முதல் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்கு பின் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அந்த மனுவை ஏற்றுக் கொண்டு அமைச்சரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பாஜகவில் இணையப்போகும் முக்கிய அரசியல்வாதிகள் யார்? எல் முருகன்
வழக்கில் சாட்சி விசாரணையை முடக்கும் நோக்கில் இரண்டாவது முறையாக விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்ததன் மூலம் நீதிமன்ற நடைமுறையை அமைச்சர் பெரியசாமி தவறாக பயன்படுத்தியுள்ளார் என நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, பெரியசாமி அமைச்சராக இல்லை. எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருந்துள்ளார். அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அவருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி பெறத் தேவையில்லை. சபாநாயகரிடம் தான் அனுமதி பெற வேண்டும்.
பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர சபாநாயகர் ஒப்புதல் அளித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றினால், அது நீதி பரிபாலனத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அசைத்து பார்த்து விடும் எனவும், அரசியல் வாதிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணை என்பது கேலிக்கூத்தானது என மக்கள் நம்ப இடமளித்து விடக் கூடாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்த நீதிபதி, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை மார்ச் 26ம் தேதிக்குள் மீண்டும் எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 28ம் தேதி எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த வேண்டும் என நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
வழக்கு மாற்றப்பட்ட பின், உடனடியாக விசாரணையை துவங்க வேண்டும் என எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தாமதப்படுத்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் முயற்சித்தால், அவர்களை ஆஜராகக் கூறி, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடலாம் எனத் தெரிவித்த நீதிபதி ஆனன்த் வெங்கடேஷ், வழக்கை தினந்தோறும் விசாரித்து ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பாலாற்றில் புதிய தடுப்பணை: ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ