Crime/Thriller திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குநர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் பிரபாகரன், சின்னகவுண்டர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு நிதி உதவி அளித்தவர் பைனான்சியர் ரகுநந்தன். இவர் தனது மகனை வைத்து Crime/Thriller படம் ஒன்றை இயக்க வேண்டும் என கடந்த 2015-ஆம் ஆண்டு இயங்குநர் மிஷ்கினுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.


இந்த ஒப்பந்தத்தின் படி இயக்குநர் மிஷ்கினுக்கு ₹1 கோடி முன்பணம் வழங்கப்பட்டதாகவும், 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படம் வெளியிட்டிருக்க வேண்டும் எனவும், ஆனால் மிஷ்கின் இதுவரை படம் எடுக்காமல் அதே கதையினை கொண்டு வேறு படங்களை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டு ரகுநந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.


இந்த மனுவினை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.


மேலும் வரும் ஜனவரி 2-ஆம் நாள் இதுகுறித்து இயக்குநர் மிஷ்கின் பதில் அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 


இயக்குநர் மிஷ்கின் தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக வைத்து சைக்கா என்ற Crime/Thriller படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.