மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா-விற்கு நினைவிடம் கட்ட தடைவிதிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா-விற்கு நினைவிடம் அமைக்க தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ML ரவி வழக்கு தொடர்ந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்படுவதாகவும் ரவி தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.


ரவி தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், சத்திய நாராயணா, ராஜமாணிக்கம் அமர்வு, தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எதிர்காலத்தில், மக்கள் நலன் கருதி அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். ஜெயலலிதா மறைந்த காரணத்தினால் தான், சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனால், ஜெயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளி எனக்கூற முடியாது என தங்களது உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.