நடக்காத விபத்திற்கு ₹1.07 லட்சம் க்ளைம்.. சென்னை நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!!!
ஒரு விபத்து தொடர்பாக ரூ .1.07 லட்சம் இழப்பீடு வழங்கிய வழக்கில் தீர்ப்பாயத்தின் உத்தரவை நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் ரத்து செய்தார்.
சென்னை (Chennai): உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக விபத்து க்ளைம் தீர்வுகளில் நெறிமுறையற்ற நடைமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
விபத்துக்கான க்ளைம்களில் காவல்துறையினரின் விசாரணை நிறைவடைவதை உறுதிசெய்யவும், விபத்து தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விபத்து குறித்த விரிவான அறிக்கை (DAR) விபத்து நடந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்புகள் (CCTNS) இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என புதன்கிழமை டிஜிபிக்கு உத்தரவிட்டபோது,
ஒரு விபத்து தொடர்பாக ரூ .1.07 லட்சம் இழப்பீடு வழங்கிய வழக்கில் தீர்ப்பாயத்தின் உத்தரவை நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் ரத்து செய்தார். இந்த க்ளைம் தவறான தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் விபத்து சம்பந்தபட்ட லாரியின் பதிவு எண் தகவல் காவல் துறை தரப்பில் மிக தாமதமாக வழங்கப்பட்டது.
ALSO READ | இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழக நிபுணர்கள் அவசியம்: Modi-க்கு EPS கடிதம்!!
சம்பந்தப்பட்ட துறைகள் / காப்பீட்டு நிறுவனங்களுடன், விபத்து தொடர்பான வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்த பிறகு ஆவணங்கள் பதிவேற்றப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி சுப்பிரமணியம், பாதிக்கப்பட்டவர் அல்லது மனைவி / குழந்தைகளின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் தெளிவாக இணையதளத்தில் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்டவர் / மனைவி / குழந்தைகளின் ஆதார் விவரங்களும் பதிவேற்றப்பட வேண்டும் என்றும் க்ளைமகளை பெறுபவர்களை அடையாளம் காணவும், பல இடத்தில் க்ளைம் செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினர். மேலும் அந்தந்த மோட்டார் விபத்து க்ளைமிற்கான தீர்ப்பாயங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் மின்னஞ்சலுக்கு, குறிப்பிட்ட க்ளைம் விபரங்களை அனுப்புமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
ALSO READ | பிரிவினையில் தொலைந்தவரின் கண்ணீர் வாழ்வு....WhatsApp அழைப்பால் இணைந்தது உறவு..!!
விபத்து பதிவேடுகளை, ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பராமரிக்கவும், விபத்து விவரங்களை மருத்துவ துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏழு நாட்களுக்குள் பதிவேற்றவும், நீதிபதி மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவைகள் இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR