தருமை ஆதீன குருபூஜை விழாவில் மதுரை ஆதீனம் பங்கேற்பு: இன்று பட்டிணப் பிரவேசம்
மயிலாடுதுறையில் தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆதிகுரு முதல்வர் குருபூஜை விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆதிகுரு முதல்வர் குருபூஜை விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
குரு ஞானசம்பந்தரின் குரு மூர்த்திகள் பூஜை விழா, ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். அப்போது, ஆதீனகர்த்தர் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடப்பது பாரம்பரியம் ஆகும்.
அந்த வகையில் நிகழாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது. இன்று 21ம் தேதி கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா ஆதின மரபுபடி, இன்று காலையில் தொடங்கியது.
தருமை ஆதீனம் 27வது குருமுகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமடத்தில் இருந்து சவாரி பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தத்தில் ஐந்து குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை செய்தார்.
மேலும் படிக்க | தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்: தடை நீக்கி உத்தரவு
தற்போது சொக்கநாதர் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த குருபூஜை விழாவிற்கு மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம் வருகை தந்துள்ளார்.
தருமபுர ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சொக்கநாதர் பூஜை மடத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு பூஜையில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டுள்ளார்.
இந்த பூஜையைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சித் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.
சர்ச்சைக்குள்ளாகி தடை விதிக்கப்பட்டு பின்னர் தடை நீக்கப்பட்ட பட்டினப்பிரவேசம் நிகழ்வு, இன்று இரவு நடைபெற உள்ளது. தருமபுர ஆதீன கர்த்தர் சிவிகை பள்ளக்கில் எழுந்தருளி, தருமபுர ஆதீன வீதிகளில் பட்டண பிரவேசம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பட்டிணப் பிரவேசம்: ஹெச்.ராஜா வெளியிட்ட புகைப்படம்
அதிலும் இந்த ஆண்டு எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுவதால் அனைவரும் ஆவலுடன் இந்த பிரவேச நிகழ்ச்சியை எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக, மனிதரை மனிதரே பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட பலர் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தது.
இதனையடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த ஆண்டு தமிழகத்தில் பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது.
பட்டிணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என பரவலாக எழுந்த கோரிக்கைகளை அடுத்து, அதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு பட்டிணப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது. .
மேலும் படிக்க | “பட்டணப் பிரவேச விழாவுக்கு மு.க.ஸ்டாலின் அனுமதி” - தருமபுரம் ஆதீனம் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR