மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி எந்த வித அசம்பாவிதமும் இன்றி நிறைவு......


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொங்கள் பண்டிகையினை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு 3 இடங்களில் நடத்தப்படுகிறது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, இன்று காலை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக துவங்கியது.


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பல்வேறு நிபந்தனைகளுடன் நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், போலீஸ் கமிஷனர் டேவிட் ஆசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த மாடு பிடி நிகழ்ச்சியை நடத்தினர். 


இந்நிகழ்ச்சியில்,  8 சுற்றுகளில் மொத்தம் 476 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன, 550 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 பேருக்கு காயம் - ஒரு காளைக்கு பலத்த காயம் அடைந்துள்ளது. இதையடுத்து, தற்போது எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், வேறுபாடின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினோம்; எந்தவித அசம்பாவிதமும் இன்றி போட்டி நடந்தது முடிந்தது.