`ப்ளூ வேல் சேலஞ்ச்` கேம்: மதுரை மாணவர் தற்கொலை!
கடந்த சில நாட்களாக பல உயிர்களை பறித்துள்ள மிகவும் ஆபத்தான 'ப்ளூ வேல் சேலஞ்ச்' என்ற 'ஆன்லைன்' விளையாட்டு பல்வேறு இணையத்தளத்தில் பரவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று இந்த விளையாடிற்கு முற்று உள்ளி வைக்க 'கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம், மைக்ரோசாப்ட், யாகூ' போன்ற இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த, 22 வயது இளைஞர் உருவாக்கிய இந்த 'ஆன்லைன்' விளையாட்டு ப்ளூ வேல் சேலஞ்ச். இந்த விளையாட்டில் பங்கேற்பவர்களுக்கு 50 நாட்களுக்கு பல்வேறு சவால்கள் தரப்படும். கடைசி சவால் தற்கொலை செய்து கொள்வது. ரஷ்யா, ஜப்பானில் அதிகமானோர் விளையாடி வரும் இந்த விளையாட்டு, நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு பயின்று வந்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், விக்னேஷின் கையில் ப்ளூ வேல் குறியீடு இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் விளையாட்டு தான், அவரது தற்கொலைக்கு தூண்டியிருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.