ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமான ஒரு நிகழ்வு, ஆண்-பெண் இருவரும் ஒரு உன்னதமான பந்தத்தில் இணைந்து அடுத்த சந்ததியை உருவாக்க நடத்தப்படும் இந்த திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.  ஒவ்வொருவருக்கும் திருமணம் பற்றிய கனவு இருக்கும், நமது திருமணம் எங்கே நடக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்று இளமை பருவத்திலிருந்தே ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள்.  அதிலும் திருமணம் நிச்சயமாகிவிட்ட நாளிலிருந்தே மணமகனும் சரி, மணமகளும் சரி தங்களது திருமணத்தில் தங்களுக்கு பிடித்தமாதிரி என்னவெல்லாம் இருக்க வேண்டும், எப்படி உடை அணியவேண்டும், என்னென்ன கலை நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும், யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியல் போட தொடங்கிவிடுவார்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போதெல்லாம் திருமணத்தில் நடனமாடுவது, கேக் வெட்டுவது, க்ரியேட்டிவாக எதாவது செய்வது, ரிமோட் கார், ஃபீடிங் பாட்டில் போன்றவற்றை மேடையில் பரிசாக  கொடுத்து கேலி செய்வது என பல பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.  திருமண நாளில் மட்டும் தான் வித்தியாசமாக எதையும் செய்யவேண்டுமா, திருமண அழைப்பிதழிலும் வித்தியாசத்தை காட்டுவோம் என்று இப்போதைய இளைஞர்கள் ஆரம்பித்துவிட்டனர்.  மற்றவர்களை காட்டிலும் தங்களது திருமண அழைப்பிதழ் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.  சமீப காலமாகவே இணையத்தில் பல வித்தியாசமான திருமண அழைப்பிதழ்கள் வைரலாகி வருகிறது.  முன்னர் வட மாநிலத்தில் பறவைக்கூடு போல செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் பிரபலமானது, பல காமெடியான உரைகள் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் என வைரலானது.  



மேலும் படிக்க | குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை! வீடியோ வைரல்!


சமீபத்தில் மாத்திரை அட்டை வடிவத்தில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் வைரலாக நிலையில், தற்போது ஒரு நகைச்சுவையான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.  மதுரையை சேர்ந்த ரஞ்சித் கண்ணன்-சகாய ஜெரின் ஆகியோரின் திருமண அழைப்பிதழ் தான் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  அதில் அவர் நடிகர்களை திருமணத்திற்கு அழைக்கும் பொருட்டு அவர்களுடன் காமெடியாக உரையாடுவது போன்று அமைந்துள்ளது.  குறிப்பாக அந்த திருமண அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள 90ஸ் கிட்ஸ்க்கு கல்யாணம் பண்ணி வைப்பதே பெருசு என்கிற வசனம் பல 90ஸ் கிட்ஸ்களின் பஞ்சான நெஞ்சங்களை புண்ணாக்குகிறது, இருந்தாலும் இந்த திருமண அழைப்பிதழ் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.


மேலும் படிக்க | இது புதுசா இருக்கே..! மருந்து டப்பாவில் திருமண அழைப்பிதழ் அடித்த தம்பதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ