மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் சைக்கில் பயிற்சி செல்பவர்களுக்கு தனிப்பாதை அமைகப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நடைபாதை உள்ளது போல், சைக்கிள் பயிற்சி செல்பவர்களுக்கு தனிப்பாதை அமைக்கப்பட உள்ளது. மேலும் வாடகைக்கு சைக்கிள்களை விடவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 


மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் தினமும் காலை நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். காலையில் நடைப்பயிற்சி செல்ல இலவசமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை நேரத்தில் பூங்காவில் பொழுதுபோக்க கட்டணம் அடிப்படையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலையில் நடைப்பயிற்சி செல்வோர் உடல் ஆரோக்கியத்திற்காக மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் யோகா, தியானம், உடற்பயிற்சி உபகரணங்கள் வைத்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது சைக்கிளிங் பயிற்சி செல்வதற்காக தனிப்பாதை சுற்றுச்சூழல் பூங்காவில் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சுற்றுச்சூழல் பூங்காவை ஆய்வு செய்துள்ளார்.


அப்போது சைக்கிளிங் பயிற்சி செல்வதற்கு தனிப்பாதை அமைக்க ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு  உத்தரவு பிரப்பித்துள்ளார்.


இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில்., "சென்னையில் குறிப்பிட்ட சில சாலைகளில் மோட்டார் வாகனப் பயன்பாட்டை குறைக்க சைக்கிள் பாதை அமைக்கப்படுகிறது. அதுபோல், மதுரை மாநகராட்சியிலும் சாலைகளில் சைக்கிள் பாதை அமைப்பதற்கு முன்னோட்டமாக சுற்றுச்சூழல் பூங்காவில் பரிசோதனை முறையில் சுற்றுச்சூழல் பூங்காவில் வாக்கிங் வருவோர் சைக்கிளிங் செல்வதற்கு  சுற்றுவட்டபாதையில் சைக்கிள் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


அதன் பயன்பாட்டை பொறுத்து முக்கிய குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ள மாநகராட்சி சாலைகளில் சைக்கிள் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


சுற்றுச்சூழல் பூங்காவில் சைக்கிள் பாதை அமைத்ததும், அதில் சைக்கில் பயிற்சி சென்று உடற்பயிற்சி செய்ய 10 சைக்கிள்கள் பூங்காவிலே கட்டணம் அடிப்படையில் வாடகைக்குவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.