அரசு ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய பென்சன், 7-வது சம்பள கமிஷன் பரிந்துரை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தும் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பல்வேறு முறைகளில் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என்பதால் போராட்டம் நடத்துவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறினர்.


இதன் பின்னர் ஐகோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு படி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். கோர்ட்டையும், கோர்ட் ஊழியர்களையும் அவமதிக்கும் வகையில் தடையை மீறி போராட்டம் நடக்கிறது. 


போராட்டத்தை கைவிட்டால், தலைமை செயலரை நேரில் வரவழைத்து பேச்சவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.