மதுரை ஐகோர்ட் கிளை தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோகோ கோலா நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் பிரபாகரன், அப்பாவு ஆகியோர் சார்பில் தனியார் நிறுவனம் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 


இதனையடுத்து, இடைக்கால தடையை நீக்க வேண்டும் என ஆலை நிர்வாகத்தினர் மனுதாக்கல் செய்தனர். உபரியாக செல்லும் நீரை தான் பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இந்த வழக்கு இன்று நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆலை நிர்வாகத்தினர் கோரிக்கையை ஏற்று, தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க குளிர்பான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.