புல்புல் கதைதான் மதுரை எய்ம்ஸும் - எம்.பி வெங்கடேசன் விமர்சனம்
சாவர்கர் புல்புல் பறவையில் வந்தது போல் ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தோம் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் (உறுப்பினர் எய்ம்ஸ் மதுரை) தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது 95 சதவீத பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என்ற பதாதைகளை கைகளில் ஏந்தியபடி எய்ம்ஸ் அமைவிடத்தை பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் “சாவர்கர் புல்புல் பறவையில் வந்தது போல் ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தோம். கட்டுமான பணிகள் துவங்காமல் 95 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளதாக அகில இந்திய பாஜக தலைவர் பொய் சொல்வது ஏற்புடையது அல்ல.
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1200 கோடி என்பது 1970 கோடி ரூபாயாக திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்ட நிலையில் உயர்த்தப்பட்ட 700 கோடியில் மத்திய அரசு வழங்க வேண்டிய 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளதால் கட்டுமான பணிகளுக்காண ஒப்பந்தம் விட முடியாத நிலை உள்ளது. உயர்த்தப்பட்ட தொகைக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக மக்களையும் மதுரை மக்களையும் பொய் சொல்லி ஏமாற்றலாம் என பாஜக அரசு நினைக்கிறது. பொய் சொல்வதையே முழு நேர வேலையாக பாஜக செய்து வருகிறது” என தெரிவித்தார்.
மேலும் படிக்க | சென்னைக்கு ஆபத்தா? 5 ஆண்டுகளில் 29% பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுமா?
இதனை தொடர்ந்து பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை எய்ம்ஸ் அமைந்தால் அதற்கான பெருமை எய்ம்ஸ் அமைய முழு பங்களிப்பை கொடுத்துள்ள ஜப்பானையே சாரும். வடிவேல் கிணற்றை காணும் என புகார் அளித்தது போல் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த எய்ம்ஸ்யை காணவில்லை என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata