ரவுடி மதுரை பாலா... தமிழகத்தில் பயங்கர குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுகளில் மதுரை பாலாவும் ஒருவர். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர், இருந்த இடத்தில் இருந்தே ஆட்களை ஏவி கொலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாரின் லிஸ்ட்டில் ஏ கேட்டகிரி ரவுடியாக சுற்றித் திரிந்தவர். இவர் மீது 11க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கொலை, கொள்ளை சம்பவங்களை செய்து வேறு ஒருவரை ஆஜராக வைத்து வழக்கை திசைதிருப்புவதில் கைதேர்ந்த மதுரை பாலாவின் கீழ் பெரும் படையே உள்ளது. பணத்திற்காக கூலிப்படையாகச் செயல்படும் அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களில், அட்டகாசத்தை ஒழிக்க தமிழக காவல்துறையினரால் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைக்கு நீண்ட நாட்களாக ஆஜராகாமல் ரவுடி மதுரை பாலா போக்கு காட்டி வந்தார். இதனால் அவரை பிடிக்க தமிழக போலீசார் களத்தில் இறங்கிய போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. திறன் வாய்ந்த காவலர்களுடன் புறப்பட்டு சென்ற தனிப்படை போலீசார் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வைத்து ரவுடி பாலாவை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவருடன் இருந்த கூட்டாளிகள் மதன் மற்றும் சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.



அதனை அடுத்து பிடிவாரண்ட் பெற்று கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்போடு ராயப்புரத்தில் ரகசியமாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்தது. இந்நிலையில், ரவுடி மதுரை பாலா பேசிய வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | திருட்டு பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - சினிமாவை விஞ்சிய நண்பனின் துரோகம்!


தமிழக போலீசார் தங்களை நிம்மதியாக வாழவிடாமல் தொல்லை கொடுத்து வருவதாகவும், தங்களது கை, கால்கள் உடைக்கப்பட்டாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அதற்கும் முக்கிய காரணம் போலீசாரே என்று பேசியுள்ளார். பல பேருக்கு உயிர் பயத்தை காட்டிய கொடூர கொலையாளிகள் இப்படி உயிர் பயத்தோடு கதறுவது தமிழக போலீசார் தில்லான நடவடிக்கையை எடுத்து காட்டுகிறது. ரடிவு மதுரை பாலாவின் கைது வெளியே தலைமறைவாக உள்ள பல்வேறு குற்றவாளிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | கூடுவாஞ்சேரி GST சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!