மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப் பெட்டிகள் வைத்து உள்ள இடத்தில் அனுமதியின்றி நுழைந்த பெண் அதிகாரி வட்டாச்சியர் பணி நீக்கம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மதுரையில் தேர்தல் முடிந்ததும் சீலிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 


இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நுழைந்து அங்குள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்சென்றதாக புகார் எழுந்தது. இந்த தகவல் தெரிந்த அரசியல் கட்சியினர் அப்பகுதிக்கு போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியதுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் புகாரும் அளிக்கப்பட்டது. 


அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை ந்டைபெற்றதில், கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் என்பது தெரிய வந்துள்ளது.  நள்ளிரவே அவரிடம் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிக்கை அனுப்பியுள்ளார்.


பெண் அதிகாரி வட்டாச்சியர் சம்பூர்ணத்தை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருவதால் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.