சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் 30 வயதான லேகா. சம்பவத்தன்று வீட்டில் இருந்தவரை கதவை தட்டி அழைத்த மர்ம நபர்கள் இருவர் கதவை திறந்ததும் லேகாவின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர். அப்போது லேகாவின் தாயாரும் அருகே இருந்ததால், அவரின் முகத்திலும் ஆசிட் விழுந்தது. வலியால் அலறி துடித்தவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். ஆசிட் விழுந்ததில் முகம் காயம் ஏற்பட லேகாவும் அவரது தாயாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்த வழக்குப்பதிவு செய்து லேகாவிடம் நடந்ததை விசாரித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அதே சமயம் லேகாவின் வீட்டருகே வைக்கப்பட்ட சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையிலும் வீடியோ பதிவிலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஆசிட் அடிக்கும் போது, லேகாவின் முன்னாள் காதலனான தீனதயாளன் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார். அவரை பிடித்து விசாரித்தால் எல்லாம் வெளிவரும் என்று நினைத்தது நிஜமாகி போனது. லேகா பார்த்திபன் என்பவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.



அதற்கு முன்பு தீனதயாளனை காதலித்திருக்கிறார். தன்னுடனான உறவை முறித்து கொண்ட லேகா பாத்திபனை காதலித்தது தீனதயாளனை வெறி பிடிக்க வைத்திருக்கிறது. அதனால் எப்படியாவது லேகாவை பழிதீர்த்தாக வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிந்தவருக்கு தன்னுடைய காதலியின் காதலனான பார்த்தீபனுக்கு அதற்கு முன்பாக ஒரு காதல் இருந்ததும் ; அந்த பெண் ஐஸ்வர்யா என்பதும் தெரியவந்தது. 



ஆம், முன்னாள் காதலியை பழிதீர்க்க நினைத்த தீனதயாளன், காதலியின் காதலனான பார்த்தீபனின் முன்னாள் காதலியுடன் கைகோர்த்திருக்கிறார். இருவரும் சேர்ந்து தங்களை ஏமாற்றியதாக லேகா, பார்த்தீபனின் அழகை சிதைக்க ஆசிட் வீச முடிவெடுத்தனர். அதன்படி சம்பவத்தன்று வீட்டிலிருந்த லேகாவின் முகத்தில் ஐஸ்வர்யாவும், தீனதயாளனும் சேர்ந்து ஆசிட் அடித்தனர். அதன் பின்னர் தீவிர விசாரணையில் எல்லாம் வெளிச்சத்திற்கு வர, அங்கிருந்து தப்பித்தவர்கள் காவல்துறையினரின் கையில் சிக்கிவிட்டனர்.


மேலும் படிக்க | நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்து ; சொத்தை பங்கு கேட்டவருக்கு நேர்ந்த கதி!


அப்படி சிக்கவில்லை என்றால் ஐஸ்வர்யாவின் காதலன் பார்த்தீபனின் முகத்திலும் ஆசிட் வீசியிருப்பார்கள் என்று அச்சப்பட வைத்துள்ளது. இந்நிலையில் லேகாவும் அவரது தாயாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, ஆசிட் வீசிய ஐஸ்வர்யாவும் தீனதயாளனும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னாள் காதலனுடன் பழகிய பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது. 


மேலும் படிக்க | தேட தேட தங்க பார்சல்கள் ; மிரண்டு போன அதிகாரிகள் - விமானத்திற்குள் தங்க வேட்டை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR