ஹேம்நாத் அளித்திருக்கும் புகார் அவர் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். விஜே சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு பூவிருந்தவல்லியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத்தான் காரணம் என கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.



இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நேரத்தில் ஹேம்நாத் தற்போது அளித்திருக்கும் புகார் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையில் அவர் அளித்திருக்கும் புகாரில், “முன்னாள் அமைச்சர், ஒரு முக்கிய அரசியல்வாதி, போதை கும்பல், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆகியோர்தான் சித்ராவின் மரணத்துக்கு காரணம். 


அவர்கள் மிகுந்த பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. எனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலமிக்க மாஃபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் வெளியே சொன்னால் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். 



எனக்கு கொலை மிரட்டல் வருவதால் தற்போது எனது வழக்கறிஞர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளேன். எனக்கு காவல் துறை பாதுகாப்பு வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


ஹேம்நாத் கூறும் முன்னாள் அமைச்சர், அரசியல்வாதி யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதேசமயம், சித்ராவின் மரணத்துக்கு முன்னாள் அமைச்சர், அரசியல்வாதி உள்ளிட்டோர்தான் காரணம் என்றால் அதை ஏன் இத்தனை ஆண்டுகளாக அவர் வெளியில் கூறவில்லை என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது.


மேலும் படிக்க | ஊரெல்லாம் ‘ஸ்வர்ணலதா’ பாட்டு உள்ளத்தை மீட்டுது...


மேலும், கடைசி காலத்தில் சித்ரா தன்னிடம் பாசத்துடன் வாழ்ந்ததாக கூறும் ஹேம்நாத் எதற்காக சித்ராவின் மரணத்திற்கு செல்லவில்லை என்ற கேள்வியையும் ஒரு தரப்பினர் எழுப்புகின்றனர்.


அதுமட்டுமின்றி தங்களது மகளின் மரணத்துக்கு ஹேம்நாத்தான் காரணம் என சித்ராவின் பெற்றோர் கூறிவரும் சூழலில் அதிலிருந்து தப்பிப்பதற்காகவும், அனைவரது கவனத்தையும் தன்னிடமிருந்து விலக்குவதற்காகவும் அவர் இவ்வாறு கூறுகிறார் எனவும் சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். 


மேலும் படிக்க | விஜய் சேதுபதியுடன் பாலிவுட் படத்தில் நடிக்கும் ராதிகா


எது எப்படியோ, சித்ராவின் மரணத்துக்கு பின் யார் இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டுமென்பதே சித்ரா தரப்பின் கோரிக்கையாக இருக்கிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR