மகாபுஷ்கர விழா: முதல்வர் புனித நீராடல்!
கடந்த செப்டம்பர் 12-ம் தேதி முதல் காவிரி மகா புஷ்கர விழா மயிலாடுதுறையில் துவங்கியது. இந்த விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது ஐதீகம். இதன்படி 144 வருடங்களுக்கு பின் மகா புஷ்கர் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் புனிதநீராடினர்.
இந்நிலையில் மகாபுஷ்கரத்தை ஒட்டி காவிரி ஆற்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனித நீராடினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பணன் உள்ளிட்டோரும் புனித நீராடினர். அரசு கொறடா ராஜேந்திரனும் காவிரியில் புனித நீராடினார்.