Shivaratri Special Government Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து வெளியான செய்திகுறிப்பில்,"வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அன்று சிவராத்திரி மற்றும் முகூர்த்தம் தினமாகும். தொடர்ந்து, மார்ச் 9 மற்றும் 10ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


கிளாம்பாக்த்தில் இருந்து...


சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 7ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 270 பேருந்துகளும், மார்ச் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 390 பேருந்துகளும், மார்ச் 9ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று 430 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


மேலும் படிக்க | Isha Mahashivratri : ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு! எங்கு எப்படி பார்ப்பது?


கோயம்பேட்டில் இருந்து...


மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 8 மற்றும் மார்ச் 9ஆம் தேதிகள் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) அன்று 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கூடுதல் பேருந்துகள் விவரம்


எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக மார்ச் 7ஆம் தேதி அன்று 270 சிறப்பு பேருந்துகளும் மார்ச் 8ஆம் தேதி அன்று 390 பேருந்துகளும் மற்றும் மார்ச் 9ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று 430 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 70 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.


முன்பதிவு செய்வது எப்படி?


இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 9,096 பயணிகளும், வெள்ளிக்கிழமை 7,268 பயணிகளும், சனிக்கிழமை 3,769 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,011 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். 


இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | மஹா சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய 3 பொருட்கள்..! வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் உறுதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ