சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இதில் 19 பேர் கொண்ட குழு, சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் கலந்துக்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறித்து பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.


இதனையடுத்து நாளை மாலை 5 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. 


மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், " கொரோனா கட்டுப்படுத்தும் வித்மாக்க ஊரடங்கு உத்தரவை மேலும் 3 வாரங்கள் நீட்டிக்கப்படவேண்டும் என மாநில அரசுக்கள் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.


அதேபோல தமிழகத்தில் சென்னையில் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,973 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.