காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கமல் ஹாசன் சந்திப்பு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்து பேசினார்!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்து பேசினார்!
இந்தாண்டின் பிப்ரவரி மாதத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். இதனையடுத்து தனது கட்சியை முறைப்படி பதிவு செய்ய, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து, கட்சியினை பதிவு செய்வதில் யாருக்கும் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததை அடுத்து கமல்ஹாசனை தேர்தல் ஆணையம் அழைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக டெல்லி சென்ற கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விரைவில் தமது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதன்பின்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கமல் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்பா நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.