திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் விக்னேஸ்வரன் விசாரித்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். 


ரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காவிரி மருத்துவனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 


இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் விக்னேஸ்வரன் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் விக்னேஸ்வரன் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தன். அவரின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாகவும், முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். 


மேலும், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய மலேசிய மக்கள் சார்பில் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறினார்...!