சமூக வலைத்தளங்களில் குழந்தைகளை மிரட்டிய நபர் கைது!
பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைகளை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று கூறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தைகளை அடித்து கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும் என்று மக்களிடம் பீதியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு (36) என்பவர் கயத்தாறு காவல் நிலைய குற்ற எண் 100/22 U/S 153(A), 505(1), 506(1) IPC & Sec 67 IT Act கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் - அதிமுக-வில் மீண்டும் உட்கட்சி பூசல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் வளைவு ரோட்டை சேர்ந்தவர் குருசாமி மகன் வெங்கடேஷ்குமார் பாபு (36). இவர் கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் தலைவர்கள் பற்றிய நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அதுகுறித்து சமூகவலை தளத்தில் பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும், தலைவர்களை அவமதிக்கும் வகையிலும், சமூகத்திற்க்கு எதிராக கலகத்தை துண்டும் வகையில் வாசகங்கள் பதிவிட்டு வெளியிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக திமுக நகர செயலாளர் சுரேஷ்கண்ணன் கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குபதிவு செய்து வெங்கடேஷ்குமார் பாபுவை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கடவுள் நம்பிக்கையை பற்றி குழந்தைகள் பெரியார் வேடமிட்டு நடித்தனர். இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. மேலும் இதற்கு முன்பும் இதே தொலைக்காட்சியில் வந்த நிகழ்ச்சி மத்திய அரசை விமர்சிப்பது போல் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் முருகன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு இருந்தார்.
மேலும் படிக்க | தலைமை ஆசிரியர் திட்டியதால் சத்துணவு பெண் அமைப்பாளர் தற்கொலை முயற்சி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR