உறங்கிக்கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் ஏராளமானோர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள கடைகள் முன்பு படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.


இந்த மார்க்கெட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் சண்முகம். இவருக்கு வயது 45. வேலை முடிந்ததும் இவர் வழக்கம் போல் அந்த பகுதியில் உள்ள கடை முன்பு இரவு படுத்து தூங்கியுள்ளார்.


அப்போது அந்த வழியாக சென்ற மர்ம நபர் யாரோ ஒருவர் சன்முகத்தின் தலையில் கல்லால் தாக்கி கொலை (Murder) செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


ALSO READ | சட்டக் கல்லூரி மாணவர் தாக்குதல்! 2 போலீசார் டிரான்ஸ்பர்


சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசார்


தகவல் அறிந்த போலீசார் (TN Police) சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சண்முகம் முன் விரோதம் காணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வழிப்பறி கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வழக்கமாக அப்பகுதியின் இரவு நேரங்களில் படுத்து உறங்கும் தொழிலாளிகள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


ALSO READ | பள்ளி மாணவிகளை கடத்திய டியூஷன் ஆசிரியர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR