நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் ஆட்கொல்லி புலி காரணமாக மக்கள் பதற்றத்தில் உள்ளனர். ஆட்கொல்லியாக மாறிய புலியை உயிருடனோ அல்லது முடியாமல் போனால் சுட்டு கொல்லவோ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிரடிப் படையினர்  புலியை தீவிரமாக தேடி வருகிறார்கள். 20 பேர் 5 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு உதவ6 பேர் கொண்ட 3 வனக் குழுவினரும் வனப் பகுதிக்குள்   சென்றுள்ளனர். புலியை கண்டுபிடிக்க சிப்பிப்பாறை மோப்ப நாய் ஒன்றும் ஈடுபடுத்தப்படுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் குழு, வயது வந்த ஆண் புலியான 'MDT 23'  என்ற புலியை வேட்டையாட 'வேட்டை ஆணை' (Hunting Order) இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 11 (1) (a)இன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஆட்கொல்லி புலி திடீரென மாயமாகியுள்ளது. இதனால், பதற்றம் அதிகரித்துள்ளது. தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடி படையினருக்கு புலி எங்கிருக்கிறது என தெரியாததால், மிகுந்த ஏமாற்றத்துடன் வன்ப்பகுதியில் இருந்து திரும்பினர்.


ALSO READ | Hunting order: முதுமலையில் காட்டுப்புலியை வேட்டையாட உத்தரவு


முன்னதாக, ஒரே இடத்தில் 4 புலிகள் சுற்றுவதால் எது ஆட்கொல்லி புலி என்று அறிந்து கொள்வதில் குழப்பம் நிலவியது குறிப்பிடத்தக்கது. ஆட்கொல்லி அல்லாத வேறு புலியை பிடித்துவிடக் கூடாது என்பதால் புலியின் அடையாளங்களை வைத்து அதை  அதிரடி படையினர் தேடி வருகிறார்கள். புலியை கண்டவுடன் முதலில் மயக்க ஊசி செலுத்திவிட்டு பின்னர் பிடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் தமிழக, கேரள வனத் துறையினர் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Also Read | புலியுடன் போராடி உயிர் தப்பித்த வீரர்; குலை நடுங்க வைக்கும் சம்பவங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR