`உடல் எடையை குறைக்க டிப்ஸ்` நிர்வாண படங்களை பெற்ற இளைஞர் - பெண்களை வலையில் சிக்கவைத்தது எப்படி?
Cyber Crime: பொய்களை கூறி பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்று, அதனை வைத்து அவர்களை மிரட்டிய இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்த சம்பவத்தின் முழு தகவல்கள் கேட்போரை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது.
Cyber Crime: பெண்களிடம் இன்ஸ்டாகிராமில் நிர்வாணப் படங்களை அனுப்பும்படி கூறி, பெண் உடற்பயிற்சி ஆலோசகர் போன்று ஆள் மாறாட்டம் செய்து, அந்த புகைப்படங்களை வைத்து மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞரை புதுச்சேரி போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட திவாகர், புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வசிக்கும் தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது போனை கைப்பற்றிய போலீஸார், அதில் இருந்து 10 நிர்வாண வீடியோக்களை கண்டுபிடித்ததாகத் தெரிவித்தனர். சாதனம் விரிவான ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும், பெண்களிடம் இருந்து புகார்கள் வந்தால் புதிய வழக்குகளை போலீசார் பதிவு செய்வார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து போலீசார் கூறுகையில்,"திவாகர் இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி பரிந்துரைகளை வழங்கும் ஒரு பக்கத்தைத் தொடங்கினார், அங்கு அவரிடம் இரண்டு பெண்கள் உடற்பயிற்சிகள் சார்ந்து சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க | ஆருத்ரா நிறுவனம் அண்ணாமலைக்கு சொந்தமானதா? விசிக வன்னி அரசு கேள்வி!
இவர் தன்னை ஒரு பெண் உடற்பயிற்சியாளர் என கூறி அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, அந்த பெண்களின் உடற்தகுதியை மேம்படுத்த பல்வேறு டிப்ஸ்களை தருவதாக கூறி, பெண்களிடம் நிர்வாண படங்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். அதாவது, தானும் பெண்தான் என கூறிக்கொண்டு தன்னை நம்பி அனுப்பும்படி கேட்டிருக்கிறார்.
இதனை நம்பிய அந்த பெண்கள், அவருக்கு தங்களின் நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து, அதே நபர் வேறொரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி, அந்த பெண்களுக்கே அவர்களின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய மிரட்டியுள்ளார். அதாவது, தன்னுடன் நிர்வாணமாக இருந்து வீடியோ கால் செய்ய மறுத்தால், அந்த புகைப்படங்கலை ஆன்லைனில் கசியவிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, சைபர் கிரைம் போலீசில் உள்ளூர்வாசி ஒருவர் புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து, திவாகரை போலீசார் கைது செய்தனர். மேலும், பெண்கள் தங்கள் படங்கள் மற்றும் வீடியோக்களை அந்நியர்களுடன் பகிர வேண்டாம் என புதுச்சேரி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் படிக்க | உதகை சிறப்பு ரயில் சீசன் தொடங்கியாச்சு...கோடையை கொண்டாடுங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ