இவருதாங்க நிஜ ஹீரோ: தண்டவாளத்தில் சிலிர்க்க வைக்கும் சாகசம், குவியும் பாராட்டுகள்
தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடும் ரெயில் முன் பாய்ந்து நிஜ ஹீரோ ஆனார் ஒரு நபர். இதைத் தொடர்ந்து அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடும் ரெயில் முன் பாய்ந்து நிஜ ஹீரோ ஆனார் ஒரு நபர். இதைத் தொடர்ந்து அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம், போபால் அருகேயுள்ள பர்கேடியில் சம்பவத்தன்று முகமது மெகபூப் (வயது 37) என்பவர், மசூதியில் தொழுகை முடித்து விட்டு ரெயில் தண்டவாள ஓரத்தில் உள்ள பாதை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அவரைப் போல பலரும் அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அந்த விபரீதம் அரங்கேறியது. 20 வயதை கடந்த இளம்பெண் ஒருவர் முதுகில் பையை சுமந்தவாறு தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சரக்கு ரெயில் வரத்தொடங்கியதை கண்டபோது அந்தப்பெண்ணுக்கு பீதி ஏற்பட்டு அலறியவாறு தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அவரால் எழுந்து ஓட முடியவில்லை.
அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பலரும் நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர செய்வது அறியாமல் திகைத்து உறைந்து போயினர்.
அந்த கணத்தில், தண்டவாளத்தில் சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தாலும் கொஞ்சமும் யோசிக்காமல் தன் உயிரைப்பொருட்படுத்தாமல் முகமது மெகபூப் ரெயில் முன் குதித்து, மின்னல் வேகத்தில் அந்தப் பெண்ணை தண்டவாளங்களுக்கு நடுவே இழுத்து படுக்கப்போட்டு, அவரது தலைக்கு நேராக தானும் தலை வைத்துப்படுத்துக்கொண்டு அந்தப் பெண்ணை தலையைத் தூக்க விடாமல் பார்த்துக்கொண்டார்.
ரெயிலின் 28 வேகன்களும் கடந்து செல்லும் வரை அவர்கள் எழுந்து விடாமல் இருக்க அங்கிருந்த மற்றவர்கள் உஷார்படுத்திக்கொண்டிருந்தனர்.
ரெயில் முழுமையாக கடந்து சென்ற பின்னர் இருவரும் எழுந்து தண்டவாளத்தை கடந்து வந்து பெருமூச்சு விட்டனர்.
கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய அந்தப் பெண்ணின் அனுபவம் அவரது குடும்பத்தினரை உருக்கியது. ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி கண் கலங்கினர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. கடந்த 5-ந் தேதி இரவு சுமார் 8 மணியளவில் நடந்த சம்பவம், இப்போதுதான் முகமது மெகபூப்பின் நண்பர் சோயப் ஹாஸ்மி மூலம் ஊடக உலகுக்கு வந்துள்ளது.
அந்த பெண்ணை மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய முகமது மெகபூப்பை “இவர்தான் அசல் ஹீரோ” என்று அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
மேலும் படிக்க | திமுகவில் மீண்டும் ஐக்கியமான கு.க.செல்வம்
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR