நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழமையான பேருந்து நிலையம் ஆகும். இதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக இடித்து விட்டு, புதிதாக கட்டுவதற்காக ரூ.78.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். பூமிக்கு அடியில் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு வசதியாக ஒரு தளம், பஸ்கள் நின்று செல்ல தரைத்தளம், அதற்கு மேல் கடைகள் செயல்படுவதற்கு என 3 தளங்கள் என 5 தளங்களுடன் பிரமாண்டமாக பஸ் நிலையத்தை கட்ட திட்டமிடப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே இருந்த பழைய பேருந்து நிலையத்தில் தென்மேற்கு பகுதியில் பழமையான பாக்கியவநாயகர் கோவிலும், மேற்குப் பகுதியில் கல்யாண விநாயகர் திருக்கோவிலும் அமைந்திருந்தது புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக ஆகம விதிப்படி இரண்டு கோவில்களும் பாடலியம் செய்யப்பட்டு அங்குள்ள விநாயகர் உக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமி கிரகங்கள் தனித்தனியே நெல் ஸ்தாபனம் செய்யப்பட்டு சந்திப்பு பகுதியில் உள்ள கண்ணம்மன் கோவில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | அச்சம் தேவை இல்லை, காவல்துறை உங்களுடன் இருக்கும்: வடமாநில தொழிலாளர்களுக்கு டிஎஸ்பி நம்பிக்கை



சுமார் ஐந்து ஆண்டுகளாக நெல்லில் விநாயகர் விக்ரகங்கள் வைக்கப்பட்டுள்ளது, ஆகம விதி மீறல் எனவும் அந்த விக்கிரகங்களுக்கு எதுவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைத்து ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தது. 



இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்த பேருந்து நிலையத்தில் இருந்து பாக்கிய விநாயகர் திருக்கோவில் மற்றும் கல்யாண விநாயகர் திருக்கோவில்களை காணவில்லை எனக் கூறி அதனை கண்டுபிடித்து தர வேண்டி நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் மூன்றடி உயர விநாயகர் சிலை உடன் ஊர்வலமாக வந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். காணாமல் போன கோவிலை கண்டுபிடித்து தரக் கோரி நூதன முறையில் விநாயகர் விக்ரகத்துடன் மனு அளிக்க வந்த நபர்களால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது


மேலும் படிக்க | வடமாநிலத்தவர்கள் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ