தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வரும் நிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார்.  பாஜக தொண்டர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மேகதாது அணை விவகாரம், மேகதாது அணை விவகாரம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஆறுகளில் தடுப்பணை கட்டுவது, கனிமவளக் கடத்தல், அங்கன்வாடி கட்டடங்களில் போதுமான கட்டுமான வசதி இல்லாதது, கள்ளச்சாராயம், லாட்டரி விற்பனை, டாஸ்மாக் கடைகளை மூடுவது, சட்ட ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், மின்கட்டணம் - பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்ச்சியில் மேடையில் கண்டன உரையாற்றிய பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, பிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச சதி நடைபெறுகிறது. வெளிநாட்டுக்கு எழுதி கொடுத்து இன்னும் 10 மாதங்களுக்கு சம்பவங்களும் போராட்டங்களும் நடைபெறும். மணிப்பூர் நடைபெறும் சம்பவங்கள் அந்நிய கைக்கூலிகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே நடைபெறும் பாலியல் பலாத்காரங்களில் 22% ராஜஸ்தானில் நடைபெறுவதாக காங்கிரஸ் அமைச்சர் கூறுகிறார். ஆனால், அசோக் கெலாட்டை யாரும் ராஜினாமா செய்ய கூறவில்லை. ஒரு வார்டு கூட வெற்றி பெறாத( நாம் தமிழர் கட்சி) மணிப்பூர் முதலமைச்சரை ராஜினாமா செய்ய கூறுகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எரித்து கொலை செய்யப்பட்டதற்கு எவ்விதமான விசாரணையும் ராஜஸ்தானில் கிடையாது.


மேலும் படிக்க | 3 ஆண்டுகளாக கோமா..! 24 வயதில் இளைஞருக்கு நடந்த அநீதி..! என்ன நடந்தது?


மேற்குவங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதுகுறித்தி தமிழகத்தில் யாரும் பேசவில்லை. ஆனால் மம்தா பானர்ஜியை அழைத்து விருந்து அளிக்கிறீர்கள். இந்து பெண் கற்பழிக்கப்பட்டால் தமிழகத்தில் இந்து விரோத கும்பல்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டால் உடனே கவலைப்படுவார்கள். மம்தா அருகில் அமர்ந்து முதலமைச்சருக்கு மணிப்பூர் பற்றி பேச என்ன தகுதி உள்ளது.  இஸ்லாத்துக்கு மதம்மாற மறுத்த திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழக காவல்துறையைவிட அமலாக்கத்துறையின் வெற்றி விகிதம் அதிகம். தமிழக காவல்துறை முதலமைச்சர் குறித்து ஓவியம் வெளியிட்டவரை கைது செய்திருக்கிறது. காவல்துறையில் அதிகாரிகள் மாறிய பின்னர் மாற்றம் வரும் என நினைத்தேன் ஆனால் தற்போது வரை மாற்றம் வரவேயில்லை.


தமிழகத்தில் தொடர் கொலைகள் நடைப்பெற்று வருகின்றன. திமுகவினரை கொலை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டர்களின் கட்சியை வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மணிப்பூர் பற்றி பேச தகுதியில்லை. செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தாரா? அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு வர அமலாக்கத்துறை அதிகாரிகளின் பைகளை குடிகாரர்களை வைத்து சோதனை செய்துள்ளனர். பீகார் காரர்களை பானிப்பூரி விற்பவர்கள் என கூறினார் ஆனால் அவர்கள் தற்போது அவரது வீட்டில் பாரின் கரன்சிகளை கண்டுபிடித்தனர். இவர்கள் யாருக்கும் மணிப்பூர் பேச தகுதியில்லை. ராஜஸ்தானில் இதேபோன்று குஜ்ஜார் மற்றும் மீனாள் சமூக மக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி முதலமைச்சர் வசுந்தரா ராஜே தீர்வு கண்டார். மணிப்பூரில் குக்கி இன மக்கள் தங்களை பழங்குடிகளாக அறிவிக்க கோரினர்.அப்போது மற்றொரு சமுதாயமான பர்மா வழியாக சீனாவின் உதவியோடு சமவெளியில் உள்ள மக்களை தாக்குகின்றனர். இட ஒதுக்கீடு விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்திதான் தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் சைவ மட்டும்தான் உள்ளது. ஆனால் மணிப்பூரில் வைஷ்ணவ உணவகம் என்று உள்ளது. மணிப்பூர் முதலமைச்சரை ராஜினாமா செய்ய கூறுபவர்கள் ஏன் ராஜஸ்தான் முதலமைச்சரை கூறுவதில்லை. 


மேலும் படிக்க | Manipur Video: அரசு ஒன்றும் செய்யவில்லை... மனவேதனையை பகிர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்!


ப.சிதம்பரம் வழக்கில் ஆஜரான கபில் சிபல் அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்து விசாரிப்பதில் பிரச்சினை இல்லை என கூறினார். ஆனால் தற்போது செந்தில் பாலாஜிக்கு மட்டும் அது எப்படி தவறாகும்? கனிமொழி திகார் சிறையில் இருந்த போது துடிக்காத மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு துடிப்பது ஏன்?. ஏனென்றால் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதலமைச்சர் வீட்டில் உள்ள அனைவரும் சிறை செல்வார்கள். அதிலும் மதச்சார்பற்ற வேஷம் போடாமல் இந்து கோயில்களுக்கு சென்று வரும் துர்கா ஸ்டாலின் சிறை செல்ல மாட்டார்.


திமுக அரசுதான் மிகவும் ஊழல் மிகுந்த அரசு. தமிழக அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள். டாஸ்மாக்கில் பொதுமக்களிடம் விற்பனை செய்வதில் ஊழல் செய்கிறார்கள். குடிகாரன் என்று சொன்னால் அமைச்சர் முத்துசாமி கோவப்படுவார். அவர் நல்லவர். ஆனாலும் தற்போது திமுகவில் உள்ளதால் அவர் அப்படிதான் செயல்படுவார். மதுப்பிரியர்களிடமே தற்போது கொள்ளையடிக்கின்றனர். தனியார் பொறியியல் கல்லூரிகளில் அமைச்சர் பொன்முடி கமிஷன் வாங்குகிறார். திமுக அரசு மக்களிடம் இருந்து நேரடியாக கொள்ளை அடிக்க கூடிய அரசாக உள்ளது. அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை அளிக்காமல் தகுதிவாய்ந்தவருக்கு மட்டும் அளிப்பதாக கூறுகிறார்கள். பேச்சில் மட்டும் திராவிட இயக்கத்தவரை வீழ்த்த முடியாது. 


கனிமவளங்களை தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். தென்காசியில் இருந்து கேரளாவுக்கு மணல் லாரிகல் செல்கிறது. ஆனால் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள்தான் வருகின்றன. மாநில சுயாட்சி பேசுபவர்கள் அமைதியாக உள்ளனர். 5 ஆண்டுகல் மணல் அள்ள தடைவிதிக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது. மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதலமைச்சருக்கு எதிராக சிபிஐ வழக்கு உள்ளதால்தான் சிபிஐ மாநில அரசிடம் அனுமதி பெறாமல் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் சிபிஐ ஏன் மாநில அரசிடம் அனுமதி கேட்க வேண்டும். திமுக அரசு தமிழகத்தில் உள்ள வளங்களை கொள்ளையடித்து வருகிறது.  500 கடைகளை மூடினாலும் டாஸ்மாக் வருமானம் குறையவில்லை என அமைச்சர் கூறுகிறார். ஏடிஎம் மையம் போல டாஸ்மாக் கடைகளை ஆங்காங்கே திறந்து வைத்துள்ளனர்.கைக்குழந்தை, கர்ப்பிணிகள் என யார் வேண்டுமானாலும் வாங்கி குடிக்கலாம். தமிழகத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்கள், இந்துகள் சிறுபான்மையாவார்கள்.


மேலும் படிக்க | விதவை மற்றும் முதியோர் உதவித்தொகையை உயர்த்த முடிவு - தமிழ்நாடு அரசு அதிரடி!


வடமாநில தொழிலாளர்கள் குறித்து அமைச்சர் பொன்முடி தவறாக கூறினார். பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை அடிக்க கூறிய ஈவெராவின் வழிவந்த ஸ்டாலின் பீகார் பார்ப்பனர் பிரசாந்த் கிஷோரை வைத்து அரசியல் அறிவை விலைக்கு வாங்கினார்கள். அனைத்து மருத்துவமனைகளிலும் மத்திய அரசின் நிதி உள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள் மத்திய ஒதுக்கீட்டில் மற்ற மாநில கல்லூரிகளில் செல்ல முடியும்.


கால்நடைகளுக்காக மத்திய அரசு அளித்த ஆம்புலன்ஸ்கள் பூந்தமல்லியில் உள்ள கிடங்கில் உபயோகப்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அளித்ததால் மாநில அரசு அளித்தது என்று கூற முடியாது என்பதால் அதனை உபயோகப்படுத்தாமல் உள்ளனர். மத்திய அரசு 33 ரூபாய்க்கு அளிக்கும் அரிசியில் தமிழக அரசு 2 ரூபாய் அளித்துவிட்டு அதில் மோடி படம் போடாமல் ஸ்டாலின் படம் போடுவது சரியா. பக்கத்து வீட்டுகாரர்கள் குழந்தை பிறந்தால் அதற்கு சென்று வாழ்த்திவிட்டு வரவேண்டும். ஆனால் வாசலில் சென்று நான்தான் காரணம் என்று கத்த கூடாது. அதுபோலதான் மத்திய அரசு கொடுக்கும் அரிசியை மாநில அரசு நாங்கள் செய்தோம் என்று விளம்பர படுத்திக் கொள்ளக்கூடாது. நான் விவசாயியாக இருந்த போது 100 கிலோ அரிசி முட்டையை தூக்கினேன் ஆனால் மது அருந்தி தற்போது 60 கிலோ மூட்டையை கூட தூக்க முடியவில்லை. தமிழ்நாடு கொள்முதல் நிலையங்களில் அரிசியை கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்கின்றனர். கொள்முதல் நிலையங்களில் கிடங்கு கட்டாமல் மரத்தின் கீழ் நெல்லை அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் அதனை சரிசெய்யாமல் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பூங்கா அமைக்கின்றனர். மக்களுக்கு எது தேவையோ அதை அமைப்பதில்லை. 


மேலும் படிக்க | கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி


சினிமாவுக்கு முக்கியத்துவம் அளிப்பதை அமித்ஷாவிடம் கூறிய போது அதிர்ந்து போனார்.யார் வேண்டுமானாலும் படம் உற்பத்தி பண்ணலாம். ஆனால் வெளியீட்டை ரெட் ஜெயன்ட் மட்டும் தான் வெளியிட வேண்டுமாம். மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் திரைபடத்தை சென்னையில் வெளியிட்ட போது  திமுகவினர் அந்தப்படத்தின் பேனரை கிழித்தனர்.செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணையிம் போது பெண் அதிகாரியின் கையை உடைத்தது திமுகவினர்தான். ஏனென்றால் திமுகவில் உள்ளவர்கள் அனைவரும் ரவுடிக்கள். நான் 5 நாட்களுக்கு தக்காளி வாங்காமல் இருக்க கூறியதை தவறாக திரித்துவிட்டனர்.


ஈ.பி.எஸ்., ஓபிஎஸ் இருந்தவரை யூபிஎஸ் தேடவில்லை. காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு 4 ஆம் இடத்திற்கு வந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மின் திருட்டு அதிகரித்துவிட்டது. மது மட்டுமில்லாமல் மின்சாரத்துறையில் டிரான்ஸ்பார்மர் வாங்கியதிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் திறமையின்மை காரணமாகதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு ஏற்படுகிறது. எனது தோட்டத்தில் ஏற்கனவே சூரிய மின்சாரம் போட்டுவிட்டேன். வீட்டிலேயேம் போட்டுவிடனும்.


இந்து நில அபகரிப்பு கும்பல் தற்போது அமைச்சராக உள்ளன. இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள வேலையாட்கள் அனைவரும் இந்துவாக இருக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. பழனி கோயில் நிலத்தில் கைவைக்க அமைச்சர் சேகர்பாபுவுக்கு என்ன உரிமை உள்ளது? பழனியில் உள்ள கோசாலை அமைந்துள்ள இடம் அறநிலையத்துறையிடம் உள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார் அது அறநிலையத்துறையின் இடமல்ல. கோயிலின் இடம். அதில் அவர் சிப்காட் கட்டப்போவதாக கூறுகிறார். கிறிஸ்தவ தேவாலயம், மசூதி உள்ள இடங்களில் சிப்காட் கட்ட முடியுமா. கோசாலையில் பசுக்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இறந்துவிடுகின்றன. நான் கோசாலை சென்றதற்காக என்மீது வழக்கு தொடுத்துள்ளார்கள்.நான் 7 வயதில் ஆர்.எஸ்.எஸ் சேர்ந்தேன். 59 வருடமாக ஒரே கொள்கையுடன் உள்ளவன் நான்.  பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்தார். கரும்பு கொள்முதலிலும் ஊழல் செய்தனர். தரமற்ற வெள்ளம் அளித்தனர். பழனியில் நிறைய இடங்களை அமைச்சர் சக்கரபாணி வாங்கியுள்ளார் எனத் தெரிவித்தார். 


மேலும் படிக்க | மணிப்பூர் விவகாரம்: பேச்சோடு நிறுத்திக்காதீங்க பிரதமரே நடவடிக்கை எடுங்க - துரைமுருகன்


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மணிப்பூர் கலவரங்களை வெளிநாட்டு நபர்கள் தூண்டிவிடும் கருத்தை பல பேர் கூறியுள்ளனர். மணிப்பூர் மலைப்பகுதியில் இருந்து மியான்மருக்கு எளிதாய் செல்லலாம் , ஆகையினால் இதை பயன்படுத்தி சீனா இந்தியாவில் கலவரங்கள் மூட்டி வருகிறது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்துக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தாரா.  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேங்கைவயல் கிராமம் தொடர்பாக எந்த போராட்டமும் நடத்தவில்லை. ஆனால் தற்போது மணிப்பூருக்கு மட்டும் போராட்டம் நடத்துகின்றார் அவர் தலித் மக்களின் பாதுகாவலர் கிடையாது என எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் திருமாவளவன் ஒரு மோசடி பேர்வழி என்பது இன்றைக்கும் ஊர்ஜிதம் ஆகவில்லை. மேற்கு வங்காளத்தில் பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணப்படுத்தி திரிணாமூல் குண்டர்கள் அவரை வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கண்டிக்காதவர்கள் மணிப்பூர் பற்றி கண்டிக்கக் கூடாது


உதயநிதி ஸ்டாலின் அமலாக்கத்துறை தன் மீது சோதனை நடத்தினால் அதை எதிர்க்க தயார் என எனக் கூறியதற்கு எச் ராஜா யார் தவறு செய்தாலும் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.  நாங்கள் உங்கள் தாத்தாவையே பார்த்திருக்கிறோம், கருணாநிதி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தியை காஷ்மீரி பாப்பாத்தி என கூறினார் ஆனால் சர்க்காரியா கமிஷன் அறிக்கை வந்தவுடன் கதவை பூட்டிக் கொண்டு காலில் விழுந்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என கோஷமிட்டவர்களின் டிஎன்ஏ என்னவென்று எங்களுக்கு நன்றாக தெரியும்.


இன்றைக்கும் கூட நான் கட்சியில் ஒரு தேசிய பொறுப்பை கொண்டுள்ளேன் ஆகையினால் எம்எல்ஏ சீட்டு எனக்கு தற்போது தேவையில்லை. நான் இதுவரை எந்த பதவியையும் தொகுதியிலும் நிற்பதற்கு கேட்கவில்லை ஆனால் கட்சி எனக்கு எந்த குறையும் வைத்ததில்லை. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் ஊரு பெயர் தெரியாதவர் என்றும் அவர் யார் என்று தெரியாது எனவும் கூறினார். 20 நாட்களாக மணிப்பூரில் மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர் வெளிநாட்டு சதிகளை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர்,இதைப் போன்று நாட்டில் குழப்பத்தை கொண்டு வருவது தேச துரோகம் எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி.. அரியர் தொகையும் வரி விலக்கும் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ