ஆஸ்பத்திரியில் கருணாநிதி! சர்ச்சை கருத்தை வெளியிட்ட மார்கண்டேய கட்ஜு!
உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மார்கண்டேய கட்ஜு தனது டிவிட்டரில் சர்ச்சை கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மார்கண்டேய கட்ஜு தனது டிவிட்டரில் சர்ச்சை கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
ரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. இதனால், காவேரி மருத்துவமனை தினமும் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காவிரி மருத்துவனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், முக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. அவருடைய வயதின் காரணமாகவும் உடல்நிலை காரணமாகவும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கிறது. தற்போது இவரின் உடல் உறுப்புகள் சீராக இயங்கி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் ரொம்பவும் பரிதாபப்படுகிறார்கள். ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அவரது சொத்து மதிப்பு என்ன? அவரது மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன? காமராஜ் இறக்கும் போது அவரிடம் ஒன்றும் இல்லை. என்ன ஒரு வேறுபாடு?
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.