தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்த  இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு பொது முடக்க காலத்தில் (Lockdown), இ-பாஸ் (E-pass) முறை நடைமுறையில் இருந்தது. ஆனால், அதில் அனுமதி பெற தாமதம் ஏற்பட்ட நிலையில், இ-பதிவு (E-Registration) முறை கொண்டு வரப்பட்டுள்ளது.


திருமணம், நெருங்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயம் ஆகும்.


இந்நிலையில்,  திருமணத்தில் கலந்து கொள்ள பயணிப்பதாக, ஏராளமானோர் விண்ணப்பித்ததை அடுத்து, அந்த பிரிவு நீக்கப்பட்டிருந்தது.  திருமணம் என்ற காரணத்தை கூறி தேவையில்லாத பயணம் மேற்கொள்ள முயற்சிப்பதாக வந்த சந்தேகங்களை அடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


ALSO READ | E-Pass: தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு அமல், விண்ணபிப்பது எப்படி


இதை அடுத்து, திருமண பிரிவை சேர்க்க கோரி பொது மக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன. எனவே,உரிய ஆவணங்களுடன் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம் என தற்போது அரசு அறிவித்துள்ளது.


இது தவிர அத்தியாவசிய தொழில்துறையில் செயல்படுபவர்கள், மருத்துவம், மற்றும் அதை சார்ந்த துறைகள், கால்நடைகளுக்கான துறைகள், வேளாண்மை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சிமெண்ட், சர்க்கரை, பெயிண்ட் உள்ளிட்ட ஆலைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கும் அனுமதியை பெற http://eregister.tnega.org என்ற வலைதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். காலை 10 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.


ALSO READ | Petrol, Diesel Price: மீண்டும் ஏறு முகத்தில் பெட்ரோல் விலை; அதிர்ச்சியில் மக்கள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR