E-Pass: தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு அமல், விண்ணபிப்பது எப்படி

மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கும் அனுமதியை பெற http://eregister.tnega.org என்ற வலைதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 17, 2021, 07:05 PM IST
E-Pass: தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு அமல், விண்ணபிப்பது எப்படி title=

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்த  இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கும் அனுமதியை பெற http://eregister.tnega.org என்ற வலைதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். 

மாவட்டங்களுக்கு வெளியே அவசர கால பயணம் மேற்கொள்ள தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ (E-Registration) முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

‘இ-பதிவு’ செய்வதற்கு தமிழக அரசின் http://eregister.tnega.org என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் தங்களுடைய செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். அருகில் ‘கேப்ட்சா’ என்ற இடத்தில் குறிப்பிட்டுள்ளதை உள்ளிட வேண்டும்.

பின்னர்  உங்கள் செல்போன் எண்ணிற்கு ஓ.டி.பி. எண் அனுப்பப்படும்.  அதனை உள்ளீடு செய்தால் ‘இ-பதிவு’ செய்யலாம். அதில் உங்கள் பயணம் செய்ய போகும் தேதி, பயணம் செய்பவர்களின் பெயர்கள், வாகன எண், பயணம் மேற்கொள்ளப்பட வேண்டிய இடம், பயணத்திற்கான காரணம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும். உங்கள் காரணங்களை உறுதிபடுத்துவதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, திருமணத்துக்கு செல்ல வேண்டும் என்றால் திருமண பத்திரிகை, பிற விபரங்களை கொடுக்கலாம்.

ஆதார், ரேஷன் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம்  ஆகிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும். இந்த விபரஙக்ளின் அடிப்படையில் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் நகல், ரயில் எண் போன்ற விபரங்களையும், மேலே குறிப்பிட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். ரயில் நிலையம் வந்து சேருவதற்கு மட்டுமே இந்த இ-பாஸ் செல்லுபடியாகும் என்றும், ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் சென்று சேரும் இடங்களுக்கு வாகனத்தின் விவரங்களை குறிப்பிட்டு அதற்கான பாஸை புதுப்பிக்க வேண்டும் என்றும் இ-பதிவு இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
திருமணம், நெருங்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயம் ஆகும்.

ALSO READ | சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: அசத்தும் ரயில்வே போலீஸார்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News