நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிலடி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடிகர் விஜய் வீடு, பிகில் பட தயாரிப்பாளர் அலுவலகம், பைனான்சியர் அன்புச் செழியன் வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறையினரின் சோதனை குறித்து சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்தி தொடர்பாக நடிகர் விஜய்சேதுபதி ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில், அன்புசெழியனுக்கு தொடர்புள்ள இடங்களிலிருந்து ரூ.77 கோடி ரொக்கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் இச்சோதனையின் போது மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜய்யை அவரது வீட்டுக்கு அதிகாரிகள் அழைத்து வந்து சோதனை நடத்தியது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இந்த சோதனையை அடுத்து சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. கிறிஸ்துவக்குழுக்கள் விஜய் மூலமாக தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகவும், இதை ஜேப்பியாரின் மகள் ரெஜினா இயக்கமாக முன்னெடுத்திருப்பதாகவும் இதில் நடிகர் விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் இதற்கான நிகழ்ச்சி வடபழனியில் நடந்தது.


முதற்கட்டமாக இந்த நடிகர்களும், இவர்கள் அடுத்தடுத்து சினிமாத்துறையில் பல நடிகர்களை கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாற்ற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் தரப்படுவதாகவும், அமித் ஷா மற்றும் மோடி விதித்திருக்கும் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தப் பணம் வந்து பிகில் படத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது..  ‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.