வன்முறை போதைக்கு எதிராக மாதர் சங்கம் 400 கி.மீ. நடைபயணம் #March4WomenRights
இன்று முதல் (நவம்பார் 25) முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வன்முறை மற்றும் போதைக்கு எதிராக 400 கி.மீ. நடைபயணம்.
சென்னை: பெண்கள் மீதான வன்முறைகளுக்கு முடிவு கட்டவும், போதை கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சுமார் 400 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடைபயணம் இன்று முதல் (நவம்பார் 25) முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நடைபயணம் இரண்டு குழுக்கள் மூலமாக நடத்தப்படுகிறது. முதல் குழு இன்று காலை 9.00 மணிக்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து துவங்கி உள்ளது. இரண்டாவது குழு இன்று காலை 9.00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து துவங்கி உள்ளது.
இரண்டு குழுக்களும் மேற்கொள்ளும் நடைபயணம் குறித்து முழு விவரம்:
குழு எண் 1
தலைமை: பி.சுகந்தி (மாநில பொதுச் செயலாளர் - AIDWA)
25.11.2019 காலை 9.00 மணி துவக்க நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் - சிதம்பரம் - குறிஞ்சிப்பாடி இரவு தங்கல்
26.11.2019 காலை 6.00 மணி குறிஞ்சிப்பாடி துவக்கம் - கடலூர் இரவு தங்கல்
27.11.2019 காலை 6.00 மணி கடலூர் துவக்கம் - புதுச்சேரி இரவு தங்கல்
28:11.2019 காலை 6.00 மணி துவக்கம் புதுச்சேரி - திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு இரவு தங்கல்
29.11.2019 காலை 6.00 மணி துவக்கம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு - தென்கோடிப்பாக்கம் இரவு தங்கல்
30.11.2019 காலை 6.00 மணி துவக்கம் கூட்டேரிப்பட்டி - அச்சிறுபாக்கம். இரவு தங்கல்
1.12.2019 காலை 6.00 மணி துவக்கம் அச்சிறுப்பாக்கம் - மதுராந்தகம் இரவு தங்கல்
2.12.2019 காலை 6.00 மணி துவக்கம் மதுராந்தகம் - செங்கல்பட்டு இரவு தங்கல்
3.12.2019 காலை 6.00 மணி துவக்கம் செங்கல்பட்டு - தாம்பரம் பொதுக் கூட்டம் இரவு தங்கல்
4.12.2019 காலை 9.00 மணி துவக்கம் தாம்பரம் - நிறைவு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
குழு எண் 2
தலைமை எ.வாலண்டினா (மாநிலத் தலைவர் - AIDWA)
25.11.2019 காலை 9.00 மணி துவக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை - கலசப்பாக்கம் இரவு தங்கல்
26.11.2019 காலை 6.00 மணி துவக்கம் கலசப்பாக்கம் - கஷ்தம்பாடி இரவு தங்கல்
27.11.2019 காலை 6.00 மணி துவக்கம் கஷ்தம்பாடி - ஆரணி இரவு தங்கல்
28.11.2019 காலை 6.00 மணி துவக்கம் தாமரைப்பாக்கம் - திமிரி இரவு தங்கல்
29.11.2019 காலை 6.00 மணி துவக்கம் திமிரி - வாலாஜா இரவு தங்கல்
30.11.2019 காலை 6.00 மணி துவக்கம் வாலாஜா - ஒலிமுகமதுபேட்டை இரவு தங்கல்
1.12.2019 காலை 6.00 மணி துவக்கம் ஒலிமுகமதுபேட்டை - காஞ்சிபுரம் இரவு தங்கல்
2.12.2019 காலை 6.00 மணி துவக்கம் காஞ்சிபுரம் - படப்பை இரவு தங்கல்
3.12.2019 காலை 6.00 மணி துவக்கம் படப்பை - தாம்பரம் பொதுக் கூட்டம் இரவு தங்கல்
4.12.2019 காலை 9.00 மணி துவக்கம் தாம்பரம் - நிறைவு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.