மாட்டுப் பொங்கல் தினத்தன்று விவசாயிக்கு அதிர்ச்சி! சிறுத்தை செய்த சம்பவம்..
Tamil Nadu News: மாட்டுப் பொங்கல் கொண்டாடி வரும் வேளையில், சிறுத்தையால் நேர்ந்த சம்பவத்தால் விவசாயிக்கு ஏற்பட்ட வேதனை. பொதுமக்கள் அச்சம். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர்.
Leopard Attack Goats: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சத்தியமங்கலம் அடுத்துள்ள காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்புராஜ் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு சுப்புராஜ் வழக்கம்போல் ஆடுகளை தனது வீட்டின் முன்பு உள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்து விட்டு உறங்கச் சென்று விட்டார்.
மூன்று வெள்ளாடுகள் தாக்கிய சிறுத்தை
இன்று காலை வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த மூன்று வெள்ளாடுகள் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தன. அருகே சிறுத்தையின் கால் தடம் பதிவானதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி சுப்புராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க - முடிஞ்சா என்ன அடக்கி பார்! ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குள் வந்த நாய்!
இழப்பீடு வழங்கப்படும் - வனத்துறையினர் உறுதி
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பவானிசாகர் வனத்துறையினர் ஆடுகளை வேட்டையாடியது சிறுத்தை என கால் தடத்தை வைத்து உறுதி செய்தனர். சிறுத்தை கடித்து உயிர் இழந்த ஆடுகளின் உடலை கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறாய்வு செய்து அதற்குரிய சான்றிதழ் பெற்று இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாட்டுப் பொங்கல் தினத்தன்று கால்நடைகளுக்கு விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபடும் நிலையில் சிறுத்தை வெள்ளாடுகளை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது?
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி முழு நிலவரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று மாட்டு பொங்கலான இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ