Palamedu Jallikattu Live: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு! வெற்றிபெற்ற வீரர் யார்?

Palamedu Jallikattu 2024 Live Updates: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 16, 2024, 04:49 PM IST
    Palamedu Jallikattu 2024 Live Updates: பாலமேடு ஜல்லிக்கட்டு குறித்த முக்கிய தகவல்களை உடனுக்குடன் இதில் தெரிந்துகொள்ளலாம்.
Live Blog

Palamedu Jallikattu 2024 Live Updates in Tamil: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று மாட்டு பொங்கலான இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு குறித்த முக்கிய தகவல்களை உடனுக்குடன் இதில் தெரிந்துகொள்ளலாம்.

 

16 January, 2024

  • 16:56 PM

    இரண்டாம் இடம் யாருக்கு? 

    11 காளைகளை அடக்கிய தமிழரசன் என்ற வீரர், 2ஆம் இடத்தை பிடித்துள்ளார். 

  • 16:54 PM

    பிரபாகரன் முதலிடம்!

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பிடித்துள்ளார். 

  • 16:53 PM

    ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு!

    சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 658 காளைகள் மற்றும் 350 வீரர்கள் பங்கேற்றனர். 

  • 16:49 PM

    பாலமேட்டில் இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுற்றது. இப்போட்டியில் 874 காளைகள் மற்றும் 485 வீரர்கள் பங்கேற்றனர். 

  • 16:40 PM

    பாலமேடு ஜல்லிக்கட்டு:40 பேர் காயம்:

    மதுரை, பாலமேட்டில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 40 பேர் காயமடைந்துள்ளதாக தகவல். 

  • 16:25 PM

    முதலிடத்தில் நீடிக்கும் பிரபாகரன்!

    10 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருக்கும் பிரபாகரன். இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக பாலமேட்டில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த வீரர் ஆவார். 

  • 16:23 PM

    பாலமேட்டில் நடைப்பெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 45 காளைகளும், 781 வீரர்களும் போட்டியில் பங்குபெற்றுள்ளன. 

  • 16:16 PM

    மதுரை, எலியார்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை குத்தியதில் பார்வையாளர் ஒருவர் பலி. காளை குத்தியதில், ரமேஷ் என்ற இளைஞர் உயிரிழப்பு.

  • 15:18 PM

    Palamedu Jallikattu Live: 8ஆம் சுற்று நிலவரம்

    8ஆம் சுற்று முடிவில் மாடுபிடி வீரர் பிரபாகரன் முதலிடத்தில் (8 காளைகள்) நீடிக்கிறார். தமிழரசன், பாண்டீஸ்வரன் ஆகியோர் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இவர்கள் தலா 6 காளைகளை அடக்கினர்.

    களம் கண்ட காளைகள்: 530 காளைகள்

    பிடிபட்ட காளைகள்: 118

    களம் இறங்கிய வீரர்கள்: 400

    காயம்: 35 பேர்

    களமிறக்கப்பட்ட காளைகள் - 717

    காளைகள் காயம் - 13

    வீரர்கள் காயம் - 12

     

  • 14:52 PM

    Palamedu Jallikattu Live Updates: 32 பேர் தகுதி நீக்கம்

    எட்டாம் சுற்று நிறைவடைந்த தற்போது வரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகள் மற்றும் 32 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • 14:36 PM

    Palamedu Jallikattu Live: எட்டாம் சுற்றில் ஆரஞ்சு ஜெர்ஸி

    பாலமேடு ஜல்லிக்கட்டு எட்டாம் சுற்று, தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் 50 வீரர்கள் களத்தில் உள்ளனர்.

  • 14:18 PM

    Palamedu Jallikattu Live: 30 பேர் காயம்

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில், இதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மாடுபிடி வீரர்கள் - 11

    மாடு உரிமையாளர்கள் - 10

    பார்வையாளர்கள் - 7

    காவலர் - 2

  • 14:14 PM

    Palamedu Jallikattu Live: 7ஆவது சுற்றும் நிறைவு

    பாலமேடு ஜல்லிக்கட்டின் ஏழாவது சுற்று நிறைவடைந்தது. தற்போது 8ஆவது சுற்று நடைபெற உள்ளது. மாலை 5 மணிவரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். 

  • 13:28 PM

    Palamedu Jallikattu Live Updates: அலங்காநல்லூரில் இறங்கும் நடிகர் சூரியின் காளை 

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர் சூரி நேரில் வந்துள்ளார். அப்போது ஊடகம் ஒன்றில் பேசிய அவர், பாலமேடு ஜல்லிக்கட்டை முதன்முதலில் பார்ப்பதாகவும், தனது காளை நாளை (ஜன. 17) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கும் எனவும் தெரிவித்தார்.

  • 13:01 PM

    Palamedu Jallikattu Live: ஆறாம் சுற்று நிறைவு

    பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆறாம் சுற்று நிறைவடைந்தது. மொத்தம் 572 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு, 91 காளைகள் மட்டுமே அடக்கப்பட்டுள்ளன. இதுவரை 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி உள்ளனர். தற்போது 7ஆம் சுற்று தொடங்கியது. அடர்பச்சை நிறத்தில் ஜெர்ஸி அணிந்து வீரர்கள் களமிறங்கி உள்ளனர். இதுவரை 26 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 

  • 12:38 PM

    Palamedu Jallikattu Live Updates: களத்தில் நின்று ஆடிய காளை

  • 12:21 PM

    Palamedu Jallikattu Live: ஐந்தாம் சுற்று நிறைவு

    பாலமேடு ஜல்லிக்கட்டில் ஐந்தாம் சுற்று நிறைவடைந்தது. மொத்தம் 250 வீரர்கள் களமிறங்கினர். 480 காளைகள் களமிறக்கப்பட்டன. அதில் 88 மாடுகள் மட்டுமே பிடிமாடுகள் ஆகும். இதில் கொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் 8 மாடுகளை பிடித்து முதலிடத்தில் நீடிக்கிறார். சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன், கொந்தகையை சேர்ந்த பாண்டீஸ்வரன் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் நீடிக்கின்றனர். பல்வேறு காரணங்களால் 26 மாடுகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன.

  • 11:42 AM

    Palamedu Jallikattu Live Updates: ஜீ தமிழ் நியூஸிலும் நேரலை!

  • 11:28 AM

    Palamedu Jallikattu Live: முதலிடத்தில் நீடிக்கும் பிரபாகரன்

    பாலமேடு ஜல்லிக்கட்டில் நான்காம் சுற்று முடிவில் பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் 8 காளைகளை அடக்கி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மேலும், சின்னப்பட்டியை சேர்ந்த தமிழிரசன், கொந்தகையை சேர்ந்த பாண்டீஸ்வரன் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

  • 11:23 AM

    Palamedu Jallikattu Live Updates: நான்காவது சுற்று நிறைவு 

    பாலமேடு ஜல்லிக்கட்டில் நான்காவது சுற்று நிறைவு பெற்றது. இளம்பச்சை நிற ஜெர்ஸியில் 50 வீரர்கள் இதில் களமிறங்கினர். மொத்தம் 4 நான்கு சுற்றுகளில் 73 மாடுகள் பிடிபட்டதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 373 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

  • 10:32 AM

    Palamedu Jallikattu Live Updates: மொத்தம் 9 பேர் காயம்

    இதுவரை பார்வையாளர்கள் இரண்டு பேர், மாடுபிடி வீரர்கள் மூன்று பேர், மாட்டின் உரிமையாளர்கள் மூன்று பேர், மேல் சிகிச்சை பெறுவோர் ஒருவர் என 9 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் சார்பு ஆய்வாளர் ஆவார்.

  • 10:29 AM

    Palamedu Jallikattu Live Updates: நான்காம் சுற்று தொடக்கம்

    பாலமேடு ஜல்லிக்கட்டில் நான்காம் சுற்று தொடங்கியது. பச்சை நிற ஜெர்ஸியில் 50 வீரர்கள் களமிறங்கினர். கடந்த சுற்றில் 150 காளைகள் அவிழ்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

  • 10:09 AM

    Palamedu Jallikattu Live: மூன்றாம் சுற்று நிறைவு

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மூன்றாம் சுற்று நிறைவடைந்தது. இந்த சுற்றில் பிங்க் நிற ஷர்ட் அணிந்து 50 வீரர்கள் களமிறங்கினர். இந்த சுற்றின் முடிவில், பொதும்புவைச் பிரபாகரன் சேர்ந்த முதலிடம் வகிக்கிறார். அவர் 8 காளைகளை அடக்கி உள்ளார். கடந்தாண்டு முதல் பரிசு பெற்ற தமிழரசன் 6 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.  

  • 09:48 AM

    6 காளைகளை அடக்கி சின்னப்பட்டி வீரர் முதலிடம்
    பாலமேடு ஜல்லிக்கட்டில் 6 காளைகளை அடக்கிய சின்னப்பட்டி தமிழரசு முதலிடத்தில் உள்ளார்.

  • 09:48 AM

    160 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
    பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 160 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.

  • 09:22 AM

    Palamedu Jallikattu Live: களத்தில் குதித்த அமைச்சர்

    பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு பின்னால் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மாடுகளை பரிசோதனை செய்து டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காளைகள் பரிசோதித்து டோக்கன் வழங்குவதற்கு நீண்ட நேரம் ஆனதால் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு மாடுகள் வராமல் இருப்பதை உணர்ந்து மேடையில் இருந்து இறங்கிய வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பரிசோதிக்கும் இடத்திற்கு சென்று மருத்துவர்களை விரைந்து பரிசோதித்து அனுப்புமாறு அறிவுறுத்தினார்.

    அமைச்சரைக் கண்டதும் மருத்துவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக வந்து காளைகளை பரிசோதித்து டோக்கன் வழங்கி, காளைகளை வாடி வாசலுக்கு அனுப்பினர். தொடர்ந்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பரிசோதனை செய்யும் இடத்திலே நின்று காளைகளை விரைந்து அனுப்புவதற்கு கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

  • 09:04 AM

    Palamedu Jallikattu Live Updates: மற்ற ஊர்களிலும்...

    மதுரை பாலமேட்டில் மட்டுமின்றி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன 

  • 08:43 AM

    Palamedu Jallikattu Live: 6 பேருக்கு காயம்

    பாலமேடு ஜல்லிக்கட்டில் தற்போது வரை 6 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

  • 08:22 AM

    Palamedu Jallikattu Live Updates: முதல் சுற்றில் மூன்று பேர் முதலிடம்

    பாலமேடு ஜல்லிக்கட்டில் தமிழரசன் மட்டுமின்றி மொத்தம் மூன்று பேர் முதலிடம் வகித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. 108 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், 18 காளைகள் முதல் சுற்றில் பிடிப்பட்டுள்ளன. 

  • 08:21 AM

    Palamedu Jallikattu Live Updates: 7 வீரர்கள் தகுதி நீக்கம்

    700 வீரர்கள் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு குழுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டது. அதில் மது அருந்திய நான்கு வீரர்கள் உள்பட 7 வீரர்கள் தற்போது வரை தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 

  • 08:09 AM

    Palamedu Jallikattu Live Updates: முடிந்தது முதல் சுற்று

    பாலமேடு ஜல்லிக்கட்டு முதல் சுற்று நிறைவடைந்தது. அதில் நான்கு காளைகளை அடக்கி தமிழரசன் முதல் என்பவர் முதலிடத்தில் உள்ளார். இவ்ர கடந்தாண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பெற்றவர் ஆவார். முதல் சுற்றில் ஜெர்ஸி எண் 18, 43, 5, 19, 30, 11 ஆகியோர் மட்டும் இரண்டாம் சுற்றிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

  • 08:01 AM

    Palamedu Jallikattu Live Updates: முதல் பரிசு என்ன?

    - போட்டியில் முதல் இடத்தில் சிறப்பாக களம் காணும் காளைக்கும், மாடுபிடி வீரருக்கும் முதல் பரிசாக தலா ஒரு நிசான் கார் வழங்கபடுகிறது.

    - 2ஆவது சிறந்த களம் காணும் காளைக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசுமாடும், 2ஆம் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு TVS Apache பைக்கும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    - போட்டியின்போது சிறப்பாக களம்கண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறப்பாக களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் பிரிட்ஜ், டிவி, கட்டில், சைக்கிள், அண்டா, கட்டில் உள்ளிட்ட  பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

  • 07:58 AM

    Palamedu Jallikattu Live: எந்த இடைவேளையும் இன்றி...

    பல்வேறு வண்ணங்களிலான சீருடைகளில் ஒவ்வொரு சுற்றிற்கும் 50 மாடுபிடி வீரர்கள் வரை களமிறங்கி விளையாடுவார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

  • 07:56 AM

    Palamedu Jallikattu Live: குடிநீர் வசதி

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நீண்ட நெடிய ஜல்லிக்கட்டு களம் என்பதால் போட்டியை காண்பதற்கு பார்வையாளர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

  • 07:55 AM

    Palamedu Jallikattu Live: கேமரா மூலம் கண்காணிப்பு

    காளைகள் வாடிவாசலுக்கு வரும் பிறவாடி பகுதிகளிலும், காளைகள் வாடிவாசலில் இருந்து செல்லும் காளை சேகரிப்பு இடத்தில் ( கலெக்சன் பாயிண்ட்) காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. போட்டி நடைபெறும் வாடிவாசல் முன்பாக 50 அடி வரை தேங்காய்நார் பரப்பபட்டுள்ளது

  • 07:52 AM

    Palamedu Jallikattu Live: தயார் நிலையில் மருத்துவக்குழு

    மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

  • 07:51 AM

    Palamedu Jallikattu Live: போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

    போட்டியினை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகம் நடத்துகிறது. போட்டியில் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • 07:47 AM

    Palamedu Jallikattu Live Updates: பாலமேடு மஞ்சமலையாற்றில் உள்ள நிரந்தர வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடங்களில் 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. போட்டியை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது. 

  • 07:39 AM

    Palamedu Jallikattu Live: மொத்த எத்தனை காளைகள்?

    பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டது. போட்டி தொடங்கியவுடன் முதலில் கிராமத்தின் சார்பில் மரியாதை காளைகள் எனப்படும் 7 கரை காளைகள் அவிழ்க்கப்பட்டது. பின்னர் போட்டியில் பங்கேற்கும் காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டது

  • 07:34 AM

    Palamedu Jallikattu Live: நேரடி ஒளிப்பரப்பை இதிலும் காணுங்கள்

    பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. கோவில் மாடுகள் முதலில் அவிழ்த்துவிடப்பட்டன. வீரர்களும், காளைகளும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின் களம் காண்கின்றனர். மாலை 5 மணி வரை போட்டி நடைபெறும், இதனை நேரலையில் காண விரும்பினால் ஜீ தமிழ் நியூஸ் இணைய பக்கத்திலும், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனின் பேஸ்புக் பக்கத்திலும் காணலாம்.

     நேரடி ஒளிப்பரப்பு: 

Trending News