பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் தமிழகமெங்கும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இதை கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.


உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். 


மாடு வளர்ப்போர் இன்று, மாடுகள் அணிந்திருக்கும் கயிறுகளை மாற்றி, கழுத்து மற்றும் கொம்புகளில் சலங்கை அணிவித்து கோயில்களுக்கு அழைத்துச் சென்று வழிபடுவர். மேலும், மாடுகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் வருவதும், தமிழரின் தனிச் சிறப்பு வாய்ந்த வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதும் இன்றைய நாளின் தனிச் சிறப்பு.