நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம்/தகனம் செய்வதை தடுத்தால் குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்று நோயால் இறந்தவர்களின் உடலை அடக்கம்/தகனம் செய்வதை தடுத்தால், தாடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கபடும் என தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. 


தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.


கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் என்ற அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில், பொது சுகாதாரச் சட்டத்தின்படி 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது. 


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம்/தகனம் செய்வதைத் தடுக்கும் செயலை தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. 


இந்த அவசரச் சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதைத் தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939, பிரிவு-74-ன் படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.