மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிபந்தனை ஜாமினில் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பல்வேறு வழக்குகளின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


சென்னை உட்பட தூத்துக்குடி, சீர்காழி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருமுருகன் காந்தி மீது 23 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்களில் சென்னை எழும்பூர், செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியதை அடுத்து இன்று வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.


மொத்தம் 55 நாட்கள் சிறையில் இருந்த திருமுருகன் காந்தி அவர்கள் உடல்நல குறைவால் 4 நாட்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவருக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து விடுவிக்கப்பட்டார்.


சிறையில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்... “என் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளும் பொய் வழக்குகள்தான். இது இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானது. தொடர்ந்து மே 17 இயக்கம் அறவழியில் போராடும்” என தெரிவித்தார்!