அடிக்கடி இடிந்துவிழும் கான்கிரீட் மேற்கூரை - அரசு கட்டி கொடுத்த வீடுகளால் தொடரும் அச்சம் !!
மயிலாடுதுறை அருகே தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி உட்படப் பெண் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் கிராமத்தைச் சுற்றியுள்ள இந்திரா நகர், கீழத்தெரு, குச்சி பாளையம், வீர மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நகர்த்தும் இப்பகுதி மக்கள், பெரும்பாலும் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளிலேயே வசித்து வருகின்றனர்.
25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் அனைத்தும், தற்போது இடிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது. திடீர் திடீரென்று கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, விபரீதத்தில் முடிகிறது. இதனால் அரசின் தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு கீழத்தெருவில் உள்ள செந்தில் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த செந்திலின் மனைவி, மற்றும் 2வயது மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் செந்திலின் மனைவி வேம்புவுக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே வேம்புவை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், 2 வயது மகள் மீது காரைகள் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதே போல் கடந்த வாரம் இந்திரா நகரில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அனிதா என்பவர், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இது போன்று இப்பகுதியில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து விழும் சம்பவம் தொடர் கதையாக மாறிவிட்டது. மேலும், மழைக்காலங்களில் வீட்டில் இருக்க முடியாமல் முன்பகுதியில் கொட்டகை போட்டு தங்குவதாகவும் இங்கிருப்பவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலை மாற, அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | விஞ்ஞான ஊழலெல்லாம் திமுகவுக்கு கை வந்த கலை - ஜெயக்குமார் விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ