தர்ணாவில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது!
நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறை அனுமதி மறுக்க, தர்ணாவில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்!
நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறை அனுமதி மறுக்க, தர்ணாவில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்!
மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். சென்னையில் இருந்து புனே செல்ல விமான நிலையத்தில் காத்திருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதுவரை அவர் மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை, எனினும் சட்டப்பிரிவு 124-ன் கீழ் (குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நக்கீரன் கோபாலிடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் சிந்தாதிரிபேட்டை காவல்நிலையத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை வருகை புரிந்தார்.
காவல்நிலையத்திற்குள் தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கறிஞர் என்ற முறையில் தன்னை காவல் நிலையத்திற்குள் அனுமதித்து நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
முன்னாதக செய்தியாளர்களிடன் பேசிய அவர்.... "காவல்துறையை இழிவுபடுத்திய நபருக்கு ஆளுநர் மாளிகையிர் விருந்து அளிக்கப்படுகிறது. ஆனால் ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பவர்களை சிறையில் அடைக்கிறது." என தெரிவித்தார்.
மத்திய அரசின் கைக்கூலியாக செயல்பட்டு வருகின்றார் தமிழக ஆளுநர் என குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா என்ன? என கேள்வி எழுப்பினார்.
இறுதியாக காவல்நிலையத்திற்குள் வைகோ அனுமதிக்கப்படா நிலையில், காவல்நிலையத்திற்கு முன்பு வைகோ தர்ணாவில் ஈடுப்பட்டார். தன்னை காவல்நிலையத்திற்குள் அனுமதிக்காத பட்சத்தில் காவல்துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து தர்ணாவில் ஈடுப்பட்ட வைகோ அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.