‘இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன்’என தமிழில் உறுதிமொழி கூறி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார் வைகோ!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலங்களவை அதிமுக எம்பிக்களான மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், ரத்தினவேல், லட்சுமணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைகிறது.


தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்நிலையில், மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. மற்றும் திமுக எம்பிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி, தி.மு.க. சார்பில் தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்றுக் கொண்டார். திமுக சார்பில் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் பதவியேற்றனர்.



அதேபோல், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகர் மற்றும் மொகமது ஜான் ஆகியோரும் பதவியேற்று கொண்டனர். தமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.