மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்- வைகோ
மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னையில் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகினாலும், தலைவர்களிடம் கொண்டுள்ள நட்புறவு தொடரும் என வைகோ தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைகோ இதனை அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, மக்கள் நலனுக்காக ஒருமித்த கொள்கைகளை கொண்டதன் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக கைக்கோர்த்து கூட்டணி அமைத்தது.
மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து பதில் கூற வைகோ மறுத்துவிட்டார்.