சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் வைகோ - போட்டோ!!
வைகோ தலைமையில் மதிமுக சார்பில் சீமக் கருவேல மரங்களை அகற்றும் பணி மேற்க் கொள்ளப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. மேலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி குறித்து ஆராய குழு ஒன்றை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. பிறகு தமிழக அரசு அமைத்த குழு சார்பில், சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதனை அகற்றலாம் என உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. எனவே தடையை நீக்கி, சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத்தடை நீங்கியதால், மதிமுக சார்பில் வைகோ தலைமையில், இன்று காலை பூந்தமல்லி மோட்டால் ஹை-வே அருகில் உள்ள சீமக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் வைகோ மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
உங்களுக்காக சில புகைப்படங்கள்:-