நீட் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளிவந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று துவங்கி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்விலிருந்து விளக்குக் கோரி தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டு சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவசர சட்டத்தை ஏற்க மறுத்த ஐகோர்ட் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.


இதையடுத்து தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.


தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவகல்லுரிகளில் மொத்தம் 2,900 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உள்ளன. 


இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 2,445 இடங்கள் தமிழகத்துக்கும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளையும் சேர்த்து அரசு ஒதுக்கீட்டுக்கு 3 ஆயிரத்து 534 இடங்களும் இருக்கின்றன.


தமிழக அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக 85 இடங்களும், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 1,198 இடங்களும் இருக்கின்றன.