நாளை கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 18-ம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார். இதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. தோல்வியுற்ற சில இடங்களில் நிர்வாகிகளை மாற்றி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில், கட்சியை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.