தமிழகம் முழுவதும் இன்று மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் 20 ஆயிரம் மூலம் 15 லட்சம் பேருக்கு டோஸ் போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.,


சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் போருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டத. 


Also Read | Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி


மேலும் இரண்டாவது மெகா கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்ற போது அதில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 தடுப்பூசிகளும், 19 ஆம் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 931 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. அந்தவகையில் மக்கள் இன்று சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை http://chennaicorporation.gov.in/gcc/covid&details/megavacdet.jsp-என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும் அல்லது 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. எனவே இன்று நடைபெற இருக்கும் மூன்றாவது மாபெரும் மூன்றாவது தடுப்பூசி முகாமை முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா ஒழிக்கும் வகையில் தங்கள் பங்கை செலுத்திட கேட்டுக் கொள்வதாக  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR